தாய்மொழி

ஒரு மனிதன் மண்ணில் அவதாரம் எடுக்கையில் அவனது பரம்பரையால் பேசப்
பட்டுக்கொண்டிருக்கும் 
மொழி என்று ஒரு வரைவிலக்கணம் கொடுக்கலாம். ஏனெனில் தாய் பேசும் மொழி என்றால் இன்றைய கட்டத்தில் பொருந்தாது,தாய் வழி மொழி என்பதே சரியாகும்,தாய் பிறந்த நாடு தாய்நாடு,ஆனால் இங்கும் பரம்பரைவழிதான் பேசப்படுகிறது,காரணம் இன்று சிலர் தாத்தாகாலந்தொட்டே அந்நிய நாடுகளில் வாழ்ந்து அந்நாட்டு மொழியையே பேசுவதால்அதுவும் குடியுரிமையும் பெற்றுள்ளதால் அந்நாட்டவராகவே கருதப்படவேண்டும்.ஆனால் அவர்களோ இங்கும் ஒட்டாமல் அங்கும் ஒட்டாமல் அவர்களது முன்னோர்
பேசிய மொழிகளையும் தமது நாட்டு மொழியுடம் கற்று பேசியும் வருகின்றனர்.காரணம் அவர்களுக்கு ஒரு தனித்துவம்,அடையாளம் தேவைப்படுவதும் அதை மூதாதையர்மொழி கொடுப்பதாலுமே!!சில பல நாடுகளில் அதற்கென்று ஒரு மொழியோ வரலாறோ இல்லை.இன்னொரு நாட்டின் மொழிதான் அவர்களுக்கும் மொழியாகிறது,அதுவேஅவர்கள் தாய் மொழியுமாகிறது.
Advertisements